கொழும்பில் உள்ள ஷமீரின் புதிய முறச்சி: ஏழை என்றாலும் மற்றவர்களை ஊக்குவிக்கிறார்
உடற்கட்டு (பொடி பில்டிங்) கலையே தனது வாழ்க்கை என்கிறார் சமீர். 29 வயதான சமீர், கொழும்பைச் சேர்ந்தவர். உடற்கட்டுக் கலையில் சாதிக்க விரும்பும் அவர் மற்றவர்களுக்கும் பயிற்சியளிக்கிறார். தன்னைப் பற்றி அவர் கூறுகையில், “எனது பெயர் சமீர். 1987ஆம் ஆண்டு பிறந்தேன். கொழும்பில் வசிக்கிறேன். மட்டக்குளியில் உள்ள பாடசாலையொன்றில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தேன்.
12 வயது இருக்கும்போது படித்துக்கொண்டே அச்சகம் ஒன்றில் பகுதிநேர வேலை செய்தேன். ஒரு அண்ணா, இரண்டு தம்பிகள், ஒரு தங்கை கொண்ட எனது குடும்பத்தில், அப்பாவுக்கு வயதானதாலும் வேலை இல்லாத காரணத்தினாலும், நான் 16வயதிலேயே வேலை க்கு செல்லும் நிலைமையாகி விட்டது.எனினும். எனது நீண்ட நாள் ஆசையும், கனவுமான ஜிம்மில் 19 வயதிலேயே பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன். ஆரம்பத்தில் எனது நிறை 41 கிலோகிராம் இருந்தது. இப்போது எனது நிறை 78 கிலோகிராம்.
எனது இலட்சியம் ஒரு சிறந்த உடல் கட்டழகனாகுவதே. இதனால், வேலை பார்த்துக்கொண்டே எனது கடை முதலாளியின் சம்மதத்துடன் பொடி பில்டிங் பயிற்சிகளில் ஈடுபட்டு, போட்டி ஒன்றில் கலந்து கொண்டேன்.அந்தப் போட்டியில் வெற்றிவாகை சூடினேன். அப்போது தான் பொடி பில்டிங் தான் எனது வாழ்க்கை என்று புரிந்து கொண்டேன். பல போட்டிகளில் வெற்றி பெற்று வந்தேன்.25 வயதில் திருமணம் செய்து, பின் 10 வருட காலம் வேலை பார்த்த கடையில் இருந்து விலகி, ஒரு வருட காலம் முச்சக்கரவண்டி ஓட்டினேன். பின்னர் என்னைப் போன்று உடற்கட்டில் ஆர்வமான இளைஞர்களை உருவாக்க வேண்டும் என நினைத்தேன்.
பல இளைஞர்களுக்கு பயிற்சியளித்து உறுதியான உடல் கட்டமைப்பு களை உருவாக்கி போட்டிகளில் கலந்துக்கொள்ள வைத்திருக்கின்றேன். அவர்களோடு நானும் இணைந்து பல போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருக்கின்றேன்.
பல தோல்விகளையும் சந்தித்திருக்கின்றேன். நான் பல வருடங்களாக பயிற்சியளித்த ஜிம்மிலிருந்து வருமானப் பற்றாக்குறை காரணமாக விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதன்பின் அஷிம் என்ற நண்பனின் அறிமுகத்தாலும் உதவியாலும் நான். தற்போழுது சுப்பர் ஜிம்மில் தலைமைப் பயிற்றுநராக (ஹெட் கோச்) ஆக பணியாற்றி வருகின்றேன்.உடல் கட்டமைப்பில் சாதிக்க வேண்டும் என்பது எமது இலட்சியம். அதை அடைவதற்கு உதவி செய்வதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன். இங்கு வந்தபின்னர் பல இளைஞர்களை ஆரோக்கியமான உடற் கட்டமைப்பு மிக்கவர்களாக உருவாக்கியுள்ளேன் என்றார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்