Header Ads

கைதிகளோடு சமரசம் பேசவேண்டி உள்ளது: 7 பேரை பணயக் கைதியாக்கிய கைதிகள்



பிரேசில் நாட்டில் உள்ள மொனோசு என்னும் நகரில் உள்ள பாரிய சிறைச்சாலை ஒன்றில், நேற்றைய தினம் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 80 சக கைதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். கைதிகளுக்குள் கலவரம் மூண்டதற்கு என்ன காரணம் என்று கேட்டால் மிரண்டு போவீர்கள். தண்ணீர் தான் காரணம் என்கிறார்கள். இதனால் ஏற்பட்ட கலவரதில் ஒருவரை ஒருவர் தாக்கி, 80 பேர் இறந்து போனது ஒருபக்கம் இருக்க.

சுமார் 7 பணியாளர்களை அவர்கள் பணயக் கைதிகளாக மடக்கி வைத்துள்ளார்கள். பொலிசார் உள்ளே வந்தால் அவர்களை கொன்றுவிடுவோம் என்று கைதிகள் மிரட்டுவதால், அவர்களோடு சமரசம்பேசி வருகின்றனர் பொலிசார். தற்போது குறித்த இந்த சிறைச்சாலையை, கைதிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

கைதிகள் பணயக் கைதிகளை பிடிப்பது என்பது வினோதமான செயல். ஆனால் தற்போது இது கூட நடக்கிறது. என்னசெய்வது பொலிசார் வெளியே இருந்து சமரசம் தான் பேச முடியும். ஆட்டம் தற்போது கைதிகள் பக்கம் உள்ளதே.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.