Header Ads

தமிழர் கடைகளும் லண்டனில் கத்தி முனையில் கொள்ளையடிக்கப் படலாம்



லண்டனில் தற்போது கத்தியோடு அலையும், குண்டர்கள் அதிகரித்து பெரும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். சந்தீப் என்னும் நபரின் கடைக்குள் நுளைந்த வெள்ளை இன இளைஞர் ஒருவர், தன்னிடம் கத்தி உள்ளது உன்னை குத்திவிடுவேன். பணத்தை தான் என்று பகிரங்கமாக கேட்க்கிறார். தர மறுக்கும் அன் நபரை தாக்க முனைந்தவேளை. மிவும் பலசாலியான சந்தீப் அவரை ஒருவாறு மடக்கி கையில் இருந்த கத்தியை பிடுங்கி எறிந்துவிட்டார்.

அங்கே வேறு பொருட்கள் வாங்க வந்திருந்த வெள்ளை இன நபர் ஒருவர், இதனை சற்று வேடிக்கை பார்த்துவிட்டு இறுதியாக பொலிசாருக்கு போன் அடிக்க உதவுகிறார். சந்தீப் என்னும் நபரை ஹீரோ என்றும் அவர் கத்தியோடு வந்த நபரை மடக்கி பொலிசாரிடம் கொடுத்தார் என்றும் ஆங்கில பத்திரிகைகள் புகழாரம் சூட்டுகிறது. ஆனால் கத்தி படக் கூடாத இடத்தில் பட்டிருந்தால், வெறும் பணத்திற்காக உயிரை இழந்திருக்கவேண்டி இருக்கும்.

இதேவேளை பல தமிழர்களது கடையில், அவரது மனைவியே டில்லில்(கல்லாபெட்டியில்) நிற்பது வழக்கம். பெண்கள் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் என்ன செய்வார்கள். இது போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் கடை உரிமையாளர்கள் இதனை ஒரு நல்ல பாடமாக எடுத்து செயல்படுவது நல்லது.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.