லண்டன் பாலத்திற்கு கீழ் நூற்றுக் கணக்கான அகதிகள்: எவ்வாறு வந்தார்கள் பொலிஸ் அதிரடி
லண்டனில் உள்ள டைனி பாலத்தினை பொலிசார் சுற்றிவளைத்து. அவ்விடத்தை திடீரென லாக் டவுன் செய்துள்ளார்கள். சற்று முன்னர் நடந்த இந்த பரபரப்பால் பாலத்திற்கு யாரோ குண்டை வைத்துவிட்டார்கள் என்ற பரபரப்பு தோன்றியது. முதலில் ஸ்கை TV இதனை தீவிரவாதிகளை பிடிக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் செய்தி வெளியிட்டது.
ஆனால் பாலத்திற்கு கீழ் பெரும் சுரங்கம் போன்ற ஒரு இடம் உள்ளது. அங்கே பல வெளிநாட்டு அகதிகள் தங்கி இருந்துள்ளார்கள். இது எப்படி என்று தெரியவில்லை என்கிறார்கள் பொலிசார். ஆனால் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர்கள் அங்கே அதிரடியாகச் சென்று அவர்களை கைதுசெய்துள்ளார்கள்.
இவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளதா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக ஸ்கை TV மேலும் தெரிவித்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்