Header Ads

ஷில்பா செட்டியின் நண்பி ஸ்தான் புல் ஐ.எஸ் தாக்குதலில் மரணமானார் அதிர்ச்சி


பல தமிழ் படங்களில் நடித்தவரும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் கூட கலக்கிய ஷில்பா செட்டி, பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். கடந்த 1ம் திகதி ஸ்தான் புல் நகரில் உள்ள இரவு நேர விடுதி ஒன்றினுள் நுளைந்த தீவிரவாதி ஒருவர் சுட்டதில் 36 பேர் பலியாகி 60 பேர் காயமடைந்தார்கள். இதில் குஷி என்னும் இந்தியப் பெண்ணும் மரணமடைந்தார்.

அவர் மிகவும் பிரபல்யமான டிசைனர் ஆவார். அவர் ஷில்பா செட்டியின் மிக நெருங்கிய தோழி என்று கூறப்படுகிறது. அவர் பல பாலிவுட் பிரபலங்களுக்கு ஆடை அலங்காரம் மற்றும் புதுவகையான டிசைன்களை செய்துகொடுத்துள்ளார். அவர் கெட்ட நேரம் செல்லக் கூடாத நகருக்கு , அதுவும் செல்லக் கூடாத நேரத்தில் சென்றுள்ளார் என்று தான் கூறவேண்டும்.

துருக்கிக்கு செல்லவேண்டாம் என பல நாடுகள் தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. அன் நாட்டில் இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.