லண்டனில் உங்கள் கதிரைக்குள் 433 மில்லியன் பவுண்டுகள் உள்ளது தெரியுமா ?
பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொருவிட்டில் உள்ள சோபாவின்(கதையின்) கீழ் , பல ஒரு பவுண்டு நாணயங்கள் வீழ்ந்து கிடக்கும். ஏன் உங்கள் வீட்டு சோபாவைக் கூட சற்று உயர்த்திப் பாருங்கள் நிச்சயம் 1 பவுண்டாவது வீழ்ந்து கிடக்கும். இவ்வாறு 433 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான 1 பவுண்டு நாணயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் வேதனையான விடையம் என்னவென்றால் , விரைவில் அதனை நீங்கள் பாவிக்க முடியாது.
பிரித்தானியாவில் அறுகோணி வடிவில் புதிய 1 பவுண்டு நாணயம் வர உள்ளது. இது வந்த உடனே பழைய நாணயத்தை நீங்கள் வாவிக்க முடியாது. அடுத்த மாதம் தொடக்கம் இது அமுலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. எனவே அடுத்த மாதம் 28ம் திகதிக்கு முன்னதாக உங்கள் பழைய 1 பவுண்டுகளை கொடுத்து புதிய 1 பவுண்டுகளை பெற்றுக்கொள்வது நல்லது.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்