Header Ads

சிறைக் கதவில் 3 விரல் துண்டானது- ஆனால் குற்றவாளி இல்லை என்று சொன்ன பொலிசார்



ஐக்கிய பிரித்தானியாவின் வேல்ஸ் நகரில், வீட்டை அழகு படுத்தும் ஜெமி என்னும் 28 நபர் மீது அயல் வீட்டார் புகார் கொடுத்துள்ளார்கள். இதனை விசாரிக்க என அவரை பொலிசார் கூட்டிச் சென்று சிறையில் அடைத்துள்ளார்கள். சிறையினுள் தள்ளி கதவை பளார் என்று அடித்து சாத்தியவேளை அவரது 3 விரல்கள் அதில் மாட்டிக் கொண்டது. பெரும் வேதனையில் துடி துடித்த அந்த நபர் 1 நிமிடமாக கத்தியும் பொலிசார் கதவை திறக்கவில்லை.

பின்னரே அவர்கள் கதவை திறந்துள்ளார்கள். விரல்கள் நசியுண்டு, அதனால் அவை செயல் இழந்துவிட்டது. தொங்கிக்கொண்டு இருந்த 3 விரல்களையும் மருத்துவர்கள் பின்னர் வெட்டி எடுத்துள்ளார்கள். இதேவேளை அயல்வீட்டார் கொடுத்த புகாரில் உண்மை இல்லை என்பதும் தெரியவந்து பொலிசார் அவர் மீது எந்த ஒரு வழக்கையும் தொடுக்காமல் விடுவித்து விட்டார்கள்.

ஆனால் எந்த ஒரு தவறும் செய்யாத ஜெமி, சிறை சென்று. அங்கே 3 விரல்களை இழந்து இன்று நிர்கதியாக நிற்கிறார். குறித்த பொலிசார் மேல் போடப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இது தற்செயலக நடந்த சம்பவம் என்று என்று அவர் கூறிவிட்டார்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.