Header Ads

லண்டன் M62 சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு செட்டப்பா ? பெரும் போராட்டம் வெடித்துள்ளது



பிரித்தானியாவின் M62 மோட்டர் வேயில் நேற்று முன் தினம் ஒரு யாசர் என்னும் முஸ்லீம் நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளார்கள். இன் நபர் ஒரு பெரும் பணக்காரர் என்றும். அவர் கார்களை வாங்கி விற்று வரும் ஒரு தொழில் அதிபர் என்பதும் திடுக்கிடும் தகவலாக வெளிவந்துள்ளது. இதேவேளை அவர் சுடப்பட்டபோது பயணித்த வாகனமே சுமார் 2 லட்சம் பவுண்டுகள் பெறுமதியானது எகிறார்கள். இவர் ஒரு கார் பிரியர் என்றும் அடிக்கடி வேகமாக காரை ஓட்டுபவர் என்பதும் தெரியவந்துள்ளது. இன் நிலையில் பொலிசார் தேவையில்லாமல் பீதியடைந்து அவரை சுட்டுவிட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் பல மணித்தியாலங்கள் கழித்தே அவரது காரில் துப்பாக்கி இருந்தாக பொலிசார் தெரிவித்துள்ள கருத்தும் சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது. குறிப்பாக யோக்ஷியர் நகரில் உள்ள பல முஸ்லீம்கள் கொதித்து எழுந்துள்ளார்கள். அன் நகரில் அவர்கள் பல ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இன் நிலையில் பொலிசார் தாமே ஒரு துப்பாக்கியை வைத்துவிட்டு. அது அவரது காரில் இருந்தது என்று இந்திய பொலிசார் பாணியில் தெரிவிப்பதாக பலர் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

எது எவ்வாறு இருப்பினும் தனிப்பட்ட(தனியார்) விசாரணை கமிஷன் ஒன்று போடப்பட்டு, இன் நிலமை ஆரயப்படும் என பொலிஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார். பொறுத்திருந்து தான் பார்கவேண்டும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.