வங்கில்யில் கொள்ளையடித்து பணத்தை கொண்டுவந்து கேசினோவில் சூதாடிய நபர்கள்
கசீனோவில் விளையாடி தோற்ற கையோடு வெளியே சென்று வங்கியை கொள்ளையடித்து. மீண்டும் திரும்பிவந்து சூதாடிய நபர்கள் இவர்களாக தான் இருக்க முடியும்.
அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த 52 வயதான கெரி ஜோன்ஸன், கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி காலை 10 மணியளவில் கெசினோ நிலையமொன்றுக்குச் சென்று சூதாட ஆரம்பித்தார்.6 மணித்தியாலங்கள் அங்கு அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார். பிற்பகல் 3 மணியளவில் 25 டொலர் கட்டணம் செலுத்தி, சூதாட்ட மேசையில் தனது நிலையை தக்க வைத்துக்கொண்டு, அங்கிருந்து வெளியேறினார்.
அதன்பின் 13 மைல் தொலைவிலுள்ள வங்கியொன்றுக்குச் சென்று, வெடிகுண்டு மற்றும் ஆயுதம் இருப்பதாக அச்சுறுத்தி, பணத்தை கொள்ளையிட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இக் கொள்ளை நடவடிக்கையின் பின்னர், மீண்டும் மேற்படி கெசினோ விடுதிக்குச் சென்று தனது சூதாட்டத்தை தொடர்ந்தாராம் கெரி ஜோன்ஸன்.
வங்கிக் கொள்ளை தொடர்பாக கெரி ஜோன்ஸன் உட்பட 24 பேருக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்