Header Ads

17 வயதிலேயே ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் இருந்தேன் எயிட்ஸ்சுக்கு இலக்கான வவுனியா மாணவி



வாழ்க்கையில் அவல நிலையை யாரும் தேடிப்போவதில்லை. ஆனால் சில சமயம் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு அவர்கள் ஆட்பட்டுவிடுகின்றார்கள். அவ்வாறு, தான் எடுத்த பிழையான தீர்மானத்தால்  எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகி, தனது வாழ்கையை தொலைத்த பெண் ஒருவரின் நியாயப்பாடுகளுக்கு அப்பாலான சோகக் கதையே இது,

30 வருடங்களாக இடம்பெற்ற போர் வடுக்களை தாங்கி நிற்கும், வவுனியாவில் கூரைகள் இல்லாத பாடசாலைக்கு கூட மணவர்கள் சென்று வருகிறார்கள். அவ்வாறு குறித்த பாடசாலைக்கு அனுப்பப்பட்ட - மாணவியே நவலக் ஷி . தனது வாழ்வில் இடம்பெற்ற இன்னல்கள் அழைத்துச் செல்லப்பட்ட இடங்கள் என்பவற்றை நவலக் ஷி  இவ்வாறு விபரிக்கின்றார், ஆண்கள் அழைப்பார்கள். நான் செல்வேன். அவ்வாறு சென்று பொலிஸாரிடம் பிடிபட்ட பின்னர் இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

இந்த இடம் நன்றாக உள்ளது. காலையில் எழுவது , வேலைகளைச் செய்வது , வழிபாடுகளில் ஈடுபடுவது , சிகிச்சைக்குச் செல்வது அதன் பின்னர் புத்தகங்களை வாசிப்பது , நித்திரைக்குச் செல்வது என்பது எமது அன்றாட செயற்பாடுகளாகும். வரலாற்று நூல்கள் , தமிழ் புத்தகங்கள் மற்றும் ஒரு சில சிறிய ஆங்கில மொழி புத்தகங்களையும் விரும்பி வாசிப்பேன். அம்மா , அப்பா , அண்ணா , இரண்டு சகோதரிகள் . தம்பி உயிரிழந்து விட்டார். நான் குடும்பத்தில் இரண்டாவது. எமது கிராமத்தில் இருந்த அக்கா தான் எனக்கு பல்வேறு ஆசைகள் காண்பித்து இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டேன். பின்னர் அடிமையாகி போனேன். 17 வயதில் இருந்தே ஆண்களுடன் செல்ல பழகினேன். அவர்கள் எனக்கு பணம் தருவார்கள்.

இவ்வாறு எயிட்ஸ் நோய் தாக்கி காப்பகத்தில் சிகிச்சை பெற்று உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் முன் நால் வவுனியா மாணவி நவலக் ஷி தெரிவித்துள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.