சரக்கை விண்வெளிக்கு ஏற்றிச் சென்ற ரஷ்யா ராக்கெட் வெடித்து சிதறி மீண்டும் பூமியில் வீழ்ந்தது
சமீபகாலமாக பெரும் எடுப்பில் தனது படைப்பலத்தை உலகிற்கு காட்டி வரும் ரஷ்யா. தன்னிடம் உள்ள ஏவுகணைகளை காட்டியும் பல உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இன் நிலையில் நேற்றைய தினம்(01) ரஷ்யா சர்வதேச விண் வெளி நிலையத்திற்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் பாரிய ராக்கெட் ஒன்றை ஏவியுள்ளது.
ரஷ்யாவுக்கு அண்டை நாடான காகாகிஸ்தானுக்கு அருகே உள்ள ரஷ்ய தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்ட நிலையில். அது விண் வெளியை அடையு முன்னரே வெடித்து சிதறி மீண்டும் பூமியில் வீழ்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலவேளைகளில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் சில கோமாளித்தனத்தில் முடிவதும் உண்டு.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்