7 வயது பெண் ஸ்னைப்பர்: மானை சுட்டுக் கொல் என்று அப்பா போடும் சத்தம் கேட்டது
அமெரிக்காவின் டெக்ஸ்ஸஸ் மாநிலத்தில் லில்லி கல்ப்பர் என்னும் 7 வயதுப் பெண், பாரிய ஸ்னைப்பர் (குறி சுடும் துப்பாக்கியால்) ஒரு மானை சுடும் காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது. அருகில் இருக்கும் அப்பா , பெரிய மானை குறிவைத்து சுடு என்று உரக்க கூறுகிறார். அப்பெண் எதுவித பயமும் இல்லாது மானை சுட்டு கொல்கிறார்.
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டபின்னரே அவர் சற்று தயக்கமடைந்துள்ளார். குறித்த வீடியோவைப் சுமார் 2 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளதோடு பல விமர்சனங்களையும் அது கிளப்பியுள்ளது. 7 வயது சிறுமிக்கு இது கொஞ்சம் ஓவர் தான் என்கிறார்கள் சிலர். ஆனால் வேட்டை ஆடும் இனத்தில் நாம் பிறந்துள்ளோம். இதனை எமது பிள்ளைக்கு கற்றுக்கொடுப்பதில் தவறில்லை என்கிறார் தகப்பன்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்