ரூ. 13,860 கோடி இந்த ஒரு இந்தியரிடம் மட்டும் இருந்துள்ளது என்றால் நம்புவீர்களா
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷா. 13 ஆயிரத்து 860 கோடி வைத்திருந்தார். அதாவது பிரித்தானிய பவுண்டில் பார்த்தால் , 1. 38 பில்லியன்( மில்லியன் அல்ல பில்லியன்) இதனைப்பற்றி தனது ஆடிட்டரிடம் கூறி இருந்தார். அவரோ மத்திய அரசு அறிவித்த IDS (Income Declaration Scheme) திட்டம் பற்றி சொன்னார். அதாவது செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கணக்கில் வராத பணம் பற்றி அரசிடம் கூறிவிட்டால் 45 சதவீதம் அபராதத்தோடு, மீதித் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி அவரும் தன்னிடம் இருந்த 13 ஆயிரத்து 860 கோடி பணம் பற்றி அரசிடம் கூறிவிட்டார். அவருக்கு இரண்டு தவணை வழங்கப்பட்டது. முதல் தவணையில் 975 கோடி அபராதத் தொகையை வழங்க வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி இருந்தனர். ஆனால் அவர் வைத்திருந்த பணம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவரிடம் வேறு பணம் இல்லை.
இதனால் அபராதத்தை செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் அவருக்கு IDS திட்டத்தின் சலுகை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. அவ்வளவு தொகையும கருப்புப் பணமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவர் இன்று நியூஸ் 18 தொலைக்காட்சியின் அகமதாபாத் அலுவலகத்தில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். இந்தச் செய்தி தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்