1 லட்சம் மக்கள்: ராணுவ மரியாதை அனைவரும் கண்ணீர் மழையில் நனைந்த காட்சி
பிரேசில் நாட்டு அதி முக்கிய உதைபந்தாட்ட வீரர்கள் பயணித்த விமானம், கொலம்பியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணித்த அனைத்து பிரேசில் வீரர்களும் இறந்து போனார்கள். ஒரு நாட்டின் தேசிய கால்பந்தாட்ட வீரர்கள் இவ்வாறு அழிந்து போனது வரலாற்றில் இதுவே முதல் தடவை என்கிறார்கள்.
இன் நிலையில் இன்றைய தினம் கடும் மழைக்கு மத்தியில் அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுமார் 2 லட்சம் மக்கள் இதில் பங்கேற்றுள்ள நிலையில், பிரேசில் நாட்டு ஜனாதிபதி நேரடியா சென்று துக்க தினத்தில் பங்கெடுத்துக்கொண்டதோடு. அவர்களுக்கு ராணுவ மரியாதை கொடுக்குமாறு உத்தரவிட்டார். அன் நாட்டில் கொடுக்கப்படும் அதி உச்ச மரியாதையாக ராணுவ மரியாதை உள்ளது.
அவர்களின் அணிவகுப்போடு நல்லடக்கம் இடம்பெற்ற நிலையில். அங்கே குழுமியிருந்த சிறுவர்கள் முதல் கொண்டு அனைவரும் அழுது புலம்பிய காட்சிகள் நெஞ்சை நெருடவைப்பவையாக அமைந்திருந்தது. உறவினர்கள் எவ்வாறு ஆறுதலடையப்போகிறார்கள் என்பதே பெரும் கேள்விக்குறி.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்