Header Ads

உன்னை நான் பேஸ் புக்கில் அன் லைக் செய்கிறேன் முன்னால் ஆனால் 2 பேர் ஸ்தலத்திலேயே பலி



இங்கே நாம் இணைத்துள்ள புகைப்படத்தில் ஒரு கார் நசுங்கி இருக்கிறது என்று தெரிகிறதா ? கீத் மேஸ் என்னும் 49 வயது நபர் தனது பார ஊர்தியை(பாரிய லாரியை) ஓட்டியவாறே மோபைல் போனில் பேஸ் புக் சென்றுள்ளார். அங்கே அவரது காதலி இவரைப் பற்றி தாறு மாறாக எழுதி வைத்திருக்க. உன்னை நான் இன்றோடு மறக்க முடிவு செய்துள்ளேன். உன்னை பிரிகிறேன். நீ எனக்கு இன்றில் இருந்து காதலி அல்ல என்று அனல் பறக்கும் வார்த்தைகளை டைப் செய்தவண்ணம் அவர் பார ஊர்தியை ஓட்டியுள்ளார்.

திடீரென முன்னால் உள்ள வாகனங்கள் நெரிசல் காரணமாக நின்றுவிட்டதை அவர் அவதானிக்கவில்லை. இதனால் முன்னால் நின்ற போர் மொண்டையோ காரின் மீது மோதி அந்த காரை உருட்டிச் சென்று முன்னால் இருந்த மற்றுமொரு பார் ஊர்திமீது மோதவைத்துள்ளார். சுமார் 15 அடி நீளமான அந்த கார் இரண்டு பார ஊர்திகளுக்கு மத்தியில் சிக்கி சிதையுண்டு 2 அடி க்கு சுருங்கிப் போனது.

அதில் இருந்த 2 இத்தாலியர்களும் உடனடியாக நசுங்கியே இறந்துபோனார்கள். எல்லாம் பேஸ் புக் மற்றும் மோபைல் போன் செய்யும் வேலை தான். பிரித்தானியாவில் 2017ம் ஆண்டு முதல் காரில் நீங்கள் செல்லும் போது மோபைல் போனை தொட்டால் கூட குற்றமாக கருதப்படவுள்ளது. இதற்கு 6 புள்ளிகளை வெட்டவும் உள்ளார்கள். எனவே இரண்டாம் தடவை நீங்கள் மாட்டிக்கொண்டால் உங்கள் லைசென்ஸ் கேன்சல் ஆகிவிடும். ஏன் எனில் 12 புள்ளிகள் போனால் வாகனத்தை ஓட்ட முடியாது. 3 வருடங்கள் கழித்தே மீண்டும் லைசன்ஸ் கிடைக்கும் என்பதனை தமிழர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.