Header Ads

லண்டனில் பர்தா அணிந்த முஸ்லீம் பெண் செய்த திடுக்கிடும் கொலையால் பொலிசார் பரபரப்பு



லண்டனில் உள்ள விக்டோரியா வணிக பல்கலைக் கழகத்திற்கு முன்னால், 18 வயது இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். பர்தா அணிந்த முஸ்லீம் பெண் ஒருவர் தனது கைப் பையினுள் கூரிய ஆயுதம் ஒன்றை வைத்திருந்ததாகவும். அவர் கைகளில் பிளேட் ஒன்று காணப்பட்டதாகவும் அருகில் உள்ள சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசார் பாரிய தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். இதேவேளை காயமடைந்த இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டும், ரத்தக் கசிவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என மேலும் அறியப்படுகிறது.

குறித்த பெண் ஏன் இந்த இளஞரை தாக்கினார் ? எதற்காக அவர் பல தரப்பட்ட கூரிய ஆயுதங்களோடு அங்கே வந்தார் என்பது புரியவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். தீவிர விசாரணை தொடர்கிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.