யாழ் நீதிமன்றத்தில் இருந்து ஹேரோயின் கடத்திப் பிடிபட்ட சண்முகநாதன் தப்பி ஓடியதால் பரபரப்பு
ஹேரோயின் என்னும் உயர் தர போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக, 30.11 அன்று கைதான நபர் ஒருவரை பொலிசார் யாழ் நீதிமன்றத்திற்கு கொண்டுவந்துள்ளார்கள். சினிமா பாணியில் பொலிசாருக்கு சிலர் டிமிக்கி கொடுத்து கவனத்தை திசை திருப்ப குறித்த நபர் யாரும் எதிர்பாராமல் திடீரென தப்பிச் சென்றுவிட்டார். இதனை மிகவும் நேர்த்தியாக ஒரு கும்பல் செய்து முடித்துள்ளதாக யாழில் இருந்து அதிர்வின் புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவர் பெயர் சண்முகநாதன் என்று கூறப்படுகிறது. பல காலமாக இவர் போதைப் பொருட்களை கடத்துவதாகவும். சர்வதேச வலைப்பின்னலோடு இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை தப்பிச் சென்ற சண்முகநாதனை மீண்டும் பொலிசார் கைதுசெய்து விட்டதாகவும். ஸ்ரீ கஜன் மற்றும் சொரூபன் என்னும் 2 தமிழ் பொலிசார் இவரை மடக்கிப் பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சண்முகநாதனை 9ம் திகதிவரை தடுப்பு காவலில் வைத்திருக்க நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்