Header Ads

எதனையும் வெடிக்க வைக்கலாம் 12 வயது சிறுவனின் இறுதி ஆசையை நிறைவேறியது




அவுஸ்திரேலியாவில் டீகிளான் என்னும் 12 வயது சிறுவன், மிக மிக அரிதான ஒருவகை புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளான். அவனுக்கு ராணுவத் தளத்தை பார்வையிட வேண்டும். சில பொருட்களை வெடிக்கவைத்து பார்க்கவேண்டும் என்பதில் கொள்ளை ஆசை.

அவுஸ்திரேலியாவில் உள்ள தொண்டர் அமைப்பு ஒன்று அவனது ஆசையை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்தது. அதுபோலவே அச்சிறுவனை ராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று, அங்பே பல விடையங்களை அவனுக்கு காட்டினார்கள். ராணுவ ஹெலிகொப்டரில் ஏற்றிச் சென்றார்கள். தரையில் இறங்கிய பின்னர், சில பொருட்களை போட்டு அதில் வெடி மருந்தை போட்டு வெடிக்கச் செய்து காட்டி அவனது அனைத்து ஆசைகளையும் பூர்த்திசெய்துள்ளார்கள்.

 குறித்த சிறுவன் தற்போது புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறான். இருப்பினும் அவன் குணமடைவானா இல்லை இறந்துபோவானா என்பது மருத்துவர்களுக்கே தெரியாது. இருப்பினும் அவன் ஆசைப்பட்ட விடையங்களை இறக்கு முன் நிறைவேற்றிவிட்டார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.