கேம்பிரிஜில் வயதானவர் வீட்டினுள் திருடன் செய்த கொடுமையை கேட்டால் குலை நடுங்கும்
பிரித்தானியாவின் கேம்பிரிஜ் நகரில் உள்ள வயதான தம்பதிகள் தங்கி இருக்கும் வீட்டினுள் கள்வர்கள் நுளைந்துள்ளார்கள். அவர்கள் சுமார் 4 மணி நேரமாக செய்த கொடுமைகளை கேட்டால் குலை நடுங்கும். பணம் எங்கே என்று கேட்டு மிரட்டிய அவர்கள், கண்ணாடியை உடைத்து நிலத்தில் போட்டு 75 வயதாகும் பாட்டியை நடக்க வைத்துள்ளார்கள். பின்னர் சுத்தியலை எடுத்து வந்து அவரது கை விரல்கள் மேல் அடித்து , உடைத்துள்ளார்கள். இவை அனைத்தையும் சுமார் 4 மணி நேரமாக நடத்திவிட்டு. பின்னர் வீட்டில் இருந்த ஏராளமான விலை மதிப்பற்ற பொருட்களை திருடிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
ஆனால் அவர்கள் கெட்ட நேரம், வெளியே உள்ள ஒரு CCTV கமராவில் இவர்கள் உருவம் பதிந்துவிட்டது. முகத்தை மறைக்க இவர்கள் மூக்கு வரை ஒரு துணியால் கட்டி இருந்தபோதும். பொலிசார் குறித்த CCTV வீடியோவை வெளியிட்டு மக்களிடம் உதவிகோரி இருந்தார்கள். எந்தப் புண்ணியவான் என்று தெரியவில்லை. ஒரு நபர் அழைத்து , அந்த இரண்டு கள்ளவர்களையும் அடையாளப்படுத்திவிட்டார்.
பொலிசார் அலேக்காகப் பாய்ந்து அவர்களை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு 15 வருட தண்டனையை நீதிபதி வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்