Header Ads

S 400 ரக ஷய ஏவுகணை - ஒரு பார்வை



மோடி புதின் சந்திப்பின் போது கையெழுத்தான ஒப்பந்தங்களில் மிக முக்கியமான ஒன்று S 400 எனப்படும் நவீன ரக வான் பாதுகாப்பு ஏவுகணை ஆகும்.இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியா சம்மதம் தெரிவித்து அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இரு தரப்பிலும் பரஸ்பரம் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.இதன் மூலம் இந்திய மற்றும் ரஷ்ய அதிகாரிகள் குழு இதன் விலை, ஒப்பந்த நிர்ணயம், மாறுதல்கள், உதிரி பாக சப்ளை மற்றும் வாரண்ட்டி ஆகியவற்றை விவாதித்து அரசுக்கு அறிக்கை தரும்.

அதனடிப்படையில் இந்திய அரசு ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்த ஏவுகணைகளை வாங்கி இந்தியாவில் நிறுவும்.பொதுவாக இந்த ஏவுகணை உலகின் தலை சிறந்த ஏவுகணை என்றாலும், அதன் தாக்கும் தூரம் நில அமைப்பை பொறுத்து வேறுபடும். S 400 என்பது ஆறு வகையான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வீசக் கூடியது. ஆறுவிதமான ஏவுகணைகளையும் அதன் ராடார் அமைப்பு ஒருமித்தே கட்டுப்படுத்த வல்லது.

இதன் மூலம் போர் விமானங்கள், குரூஸ் ரக ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஒரே நேரத்தில் தாக்க முடியும். இதை ரஷ்யா இதுவரை சோதனை செய்து பார்க்கவில்லை என்றாலும் இதனால் முடியும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்காவின் AEGIS எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு மட்டுமே இதை சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு S 400 வான் பாதுகாப்பு தொகுதியில்

1. வான் பரப்பை கண்காணிக்கும் ராடார்கள் – ஒன்று அல்லது இரண்டு வகையான ராடார்கள்
2. ஏவுகணைகளுக்கு வழி காட்டும் மற்றும் கட்டுப்படுத்தும் ராடார் – ஒரு தொகுதிக்கு ஒன்று
3. ஏவுகணைகளை வீசும் அமைப்பு- ஒரு தொகுதியில் சுமார் 12 வரை இருக்கும்
4. ஏவுகணைகளை கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் அதை லோட் செய்யும் வாகனங்கள்
5. மொத்த அமைப்புக்கும் தேவையான மின்சாரத்தை வழங்கும் ஜெனெரேட்டர் வாகனம்
6. இவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு.

இவை அனைத்தும் ஒரு சேர இருந்தால் மட்டுமே S 400 முழுமையாக இயங்கும், இவற்றில் முக்கியமான ஒன்று செயலிழந்தாலும் மொத்த அமைப்பும் செயல்படாது.




No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.