சூப்பர் HUMAN அமெரிக்க ஆமியின் புது கண்டு பிடிப்பு
அமெரிக்க ராணுவம் துவகையான புரட்சி ஒன்றை ஏற்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் சனத்தொகை அதிகம் கொண்ட நாடுகள் தமது ராணுவத்தில் பல லட்சம் இளைஞர்களை இணைக்கிறது. இதனால் அவர்கள் படைப் பலம் பெருகுகிறது. உதாரணமாக அவர்களை நோக்கிச் சுட்டால் அவர்கள் நிச்சயம் மரணிப்பார்கள். ஆனால் சுட்டாலும் மரணிக்காத வீரர்களை உருவாக்கினால், வெற்றி எமது பக்கமே என்று கருதும் அமெரிக்க ராணுவம். தனது படை வீரர்களுக்கு ஒருவகை திரவத்தால் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆன கவச உடைகளை தயாரித்துள்ளது.
இதனை அணிந்தால் குண்டு உங்களை துளைக்காது. முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதோடு. அங்க அசைவுகளும் மிகவும் இலகுவாக இருக்கும். மேலும் இது பாரம் கூடிய உடைகளும் அல்ல. இதுபோன்ற 4ம் தலை முறை கவசங்களை அமெரிக்கா தயாரித்து. நேற்றைய தினம் ஒத்திகை பார்த்துள்ளது. அதுபோக ராணுவத்தினர் குறிபார்த்து சுடும் வகையில் ஹெல்மெட்டில் நுண்ணிய தொலை நோக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. ஆக மொத்ததில் நாம் சினிமாவில் பார்த்த பல கற்பனையான விடையங்கள் தற்போதைய நவீன உலகில் சாதகமாகி வருகிறது என்பது தான் உண்மையாகும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்