போலந்தி இருந்து லண்டன் வந்து பண்டி இறைச்சியை மசூதிக்கு முன் எறிந்த நபர்கள்
போலந்து நாட்டில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வரும் 2 இளைஞர்கள். லண்டனில் உள்ள மசூதி ஒன்றுக்கு முன்னால் பண்டி இறைச்சியை வீசி எறிந்து இதனை சாப்பிடுங்கள் என்று கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்கள். மத்தியூஸ் மற்றும் பிட்றோஸ் என்னும் 22 வயது இளைஞர்களே இவ்வாறு செய்துள்ளார்கள். லண்டனில் உள்ள ஹம்டன் என்னும், பள்ளிவாசலுக்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனால் அங்கே இருந்த CCTV கமராவை வைத்து பொலிசார் இவர்களை அடையாளம் கண்டு பிடித்துவிட்டார்கள்.
இவ்விருவரையும் கைதுசெய்த பொலிசார் சம்பவ தினத்தன்று எங்கே நீங்கள் இருந்தீர்கள் என்று கேட்டவேளை இருவரும் பொய்யுரைத்துள்ளார்கள். ஆனால் பொலிசாரிடம் சாட்சியாக CCTV வீடியோ இருந்ததனால், நீதிமன்றில் இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா 8 மாத சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்