அமெரிக்க யுத்த ராங்கியை அழித்த ரஷ்ய ஏவுகணை: ஆனால்
அமெரிக்காவின் எம் 1-அப்ராம் என்னும் யுத்த டாங்கிகள் மிகவும் பலமானவை. அவை ஒவ்வொன்றும் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியானவை. இவற்றில் சில ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக யுத்தம் புரிய பாவிக்கப்படுகிறது. இன் நிலையில் ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இறுதியாக நிலைகொண்டுள்ள சிறிய இடத்தை பிடிக்க ஈராக்கிய மற்றும் அமெரிக்க படைகள் தற்போது பெரும் போரில் இறங்கியுள்ளது. நேற்று முன் தினம் ஐ.எஸ் தீவிரவாதிகள் ரஷ்யாவின் "கோர்- நெட்" என்னும் ஏவுகணையைப் பாவித்து, தம்மை நோக்கி நெருங்கி வந்த அமெரிக்க டாங்கியை அழித்துள்ளார்கள்.
இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. காரணம் என்னவென்றால். இது போன்ற அமெரிக்க டாங்கிகளை உலக நாடுகள் பல வாங்கி பாவித்து வருகிறது. ஆனால் எவருக்கும் தெரியாது இது தகர்க்க வல்லது என்பது. ரஷ்யாவின் இந்த கோர்- நெட் ஏவுகணை வெறும் 85,000 ஆயிரம் டாலருக்கு பெற்றுக் கொள்ளலாம். இதனை வைத்து 5 மில்லியம் பெறுமதியான மற்றும் அதி நவீன டாங்கை அழிக்க முடியுமா ? என்று பல நாடுகள் வியப்பில் உள்ளது. அமெரிக்காவிடம் பணத்தை கொடுத்து இதுபோல பல டாங்கிகளை பெற்றுக்கொண்ட நாடுகள் தற்போது முக்காடு போடும் நிலையில் உள்ளார்கள்.
ரஷ்யாவும் இது போல பல ஏவுகணகளை தயாரித்து வைத்திருக்கிறது. ஆனால் அதனை அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்தி பார்க்க முடியுமா ? இல்லையே ... எனவே இதுபோன்ற இடங்களில் அமெரிக்க படைகள் போராடும்போது. ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சில ஆயுதங்களை ரஷ்யா கொடுத்து விடுகிறது. இதனூடாக அவர்கள் அதனை பயன்படுத்தினால். அழிவு எப்படி பட்டது என்று பார்க்கவும். தன்னுடைய ஆயுதங்களின் திறன் பற்றி அறிந்துகொள்ளவும் ரஷ்யாவுக்கு இது வாய்ப்பாக அமையும் அல்லவா. இதில் அமெரிக்காவும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களும் ரஷ்யா தனது எல்லையில் வேறு நாடுகளோடு சண்டையிட்டால். உடனே தம்மிடம் உள்ள அதி திறன் வாய்ந்த ஆயுதங்களை அன் நாட்டிற்கு கொடுத்து ஒரு முறை பரீட்சித்துப் பார்த்துவிடுவார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்