அமெரிக்காவில் உடற்பயிற்சி ஆசிரியை மாணவிக்கு அளித்த பயிற்சி இதுதான்..!
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாக வேலை செய்தவர் Alyson London. வயது 41. இவர் மீதான குற்றச்சாட்டு 14 வயதான மாணவி ஒருவருக்கு 1 லட்சத்து 29 ஆயிரம் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
அதில் பல செக்ஸ் குறுஞ்செய்திகள். சுய இன்பம் பற்றியும், அந்த பெண்ணை காதலிப்பதாகவும் அனுப்பியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமியுடன் தேவாலயம், பூங்கா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது
.ஒரு முறை அந்த ஆசிரியை, சிறுமியை பாலியல் ரீதியாக தொட்டு தழுவியதை தான் பார்த்ததாக இன்னொரு ஆசிரியை போலீசிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த ஆசிரியை தன்னுடைய குரு என்றும் அவர் தன்னிடம் தவறாக நடக்கவில்லை என்றும், அவருக்கு சொந்த வாழ்வில் அவரது கணவரால் ஏற்பட்ட பாதிப்புகளை தன்னிடம் சொல்லியதாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார். இந்தச் செய்தி புளோரிடாவில் காட்டூத் தீ போல் பரவி வருகிறது.
பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை மீது 22 குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ள போலீசார் எனினும் கைது செய்து விசாரிக்கத் தேவையான வலுவான புகார்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்