சுமார் 5 நிமிடம் 9 பேர் கொண்ட கும்பல் தெருவிலேயே வைத்து வெட்டி படுகொலை..!?
கொடூர கொலைகளை வேடிக்கை பார்க்கும் மனோநிலை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பலர் அந்த சூழல்களில் ஸ்தம்பித்துபோய் விடுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு காரணமாக இருந்தாலும், நிதானத்துடன் இருக்கும் சிலரோ, நமக்கெதர்க்கு வம்பு என்ற மனோநிலையில் இருந்து விடுகின்றனர்.
இந்நிலையில் திருச்சி குழுமணி அருகே உள்ள கோப்பு கிராமத்தை சேர்ந்த சகோதர்கள் ராஜா மற்றும் பூபதி ஆகியோரை 9 பேர் கொண்ட கும்பல் அவர்களது தெருவிலேயே வைத்து வெட்டி படுகொலை செய்தது. சுமார் 5 நிமிடம் இந்த ரணகளம் நடந்துள்ளது.
இச்சம்பவம் நடக்கும் போது, சுமார் 50 பேர் சுற்றி நின்று இதனை வேடிக்கை பார்த்துள்ளனர். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த கொலையில் கூலிப்படைகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதும், பெரும்பாலானோர் 20 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்