Header Ads

ஒருதலைக் காதல் கொலைகள் பல நடந்திருந்தாலும்




ஒருதலைக் காதல் கொலைகள் பல நடந்திருந்தாலும் சுவாதி கொலை தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. கொலைகள் கொலையான  பெண்களின் வாழ்விற்கு முற்றுபுள்ளி வைக்கின்றன. ஆனால் இளம் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு அவர்களை நடை பிணமாக்கி விடுகின்றன.

இதற்கு ஆண்கள் தான் காரணம் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதும் முட்டாள் தனத்தின் உச்சம். அவர்கள் செய்த கொடூரத்திற்கு இணையான அறிவற்ற செயல் என்றால் மிகையாது. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு இந்த காலத்திற்கேற்ற அறிவார்ந்த ஆலோசனைகள், வாய்புள்ள  இளைஞர்கள், இளம்பெண்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வதும் இத்தகைய குற்றங்களை குறைக்கலாம்.

இந்நிலையில் பக்குவமற்ற ஒரு இளைஞரால் பறிபோய் உள்ளது ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை. நெல்லை மாவட்டம் களக்காட்டில் வசிக்கும் ராம லட்சுமி மீது அவரை ஒரு தலையாக காதலித்த சின்னராசு ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது.

இதில் அவர் முகம் சிதைந்து விட்டது. அவரைபோலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் பிடித்து விடுவார்கள். அவரோடு இந்த சம்பவங்கள் முடிவுக்கு வருமா? என்றால் நீங்களே இதற்கு விடைதேடிக் கொள்ளலாம்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.