ஹிலரியை விட 8 புள்ளியால் ரம் முன் நிலை வகிக்கிறார்
ஹிலரி கிளிங்ரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சற்றும் எதிர்பார்க்காத விடையம் ஒன்று நடந்துள்ளது. அவரது உதவியாளரின் கணவர் சிக்கலில் இருந்தவேளை அவருக்கு ஹிலரி உதவிய விடையம் தொடர்பான மின்னஞ்சல்கள் பல , அமெரிக்க எப்.பி.ஐயிடம் சிக்கியுள்ளது. இது தொடர்பாக முன்னரும் அவர்கள் விசாரணைகளை நடத்தி பின்னர் அதனை கிடப்பில் போட்டார்கள். ஆனால் சரியான நேரம் பார்த்து அவர்கள் அதனை பாவித்து ஹிலரியின் செல்வாக்கை சரித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அமெரிக்க புலனாய்வுத்துறை தலைவர், டொனால் ரம்புக்கு மிகவும் நெருக்கமானவர்.
னடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஹிலரி கிளிங்கரன் டொனால் ரம்பை விட சுமார் 12 புள்ளிகள் முன் நிலை வகித்துவந்தார். ஆனால் எப்.பி.ஐ தாம் ஹிலரியின் மின்னஞ்சல் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த உள்ளோம் என்று கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்கள். இதில் அவரது செல்வாக்கு வெகுவாக சரிவடைந்து தற்போது ஹிலரியை விட டொனால் ரம் 8 புள்ளிகளால் முன் நிலை வகிக்கிறார். இது பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது எனலாம்.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்