இந்தோனேஷியாவில் மனைவியை பலாத்காரம் செய்தவனை சமைத்து சாப்பிட்ட கணவன்..!!
இந்தோனேஷியாவின் லம்புங் மாகாணத்தின் துலாங் பவா பகுதியை சேர்ந்தவர் ரூடி எபண்டி (30). இவருக்கும் நூரியா என்ற பெண்ணுக்கும் சுமித்ராவில் திருணம் நடந்தது. முதல் இரவில் மனைவி கன்னித் தன்மையை இழந்தவர் என்பது ரூடிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் இதற்கு யார் காரணம் என்று மனைவியிடம் கேட்டார். அதற்கு வேன் டிரைவர் ஒருவரால் நான் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்று நூரியா கூறியுள்ளார்.
இதனையடுத்து மனைவியின் மூலம் வேன் டிரைவரை கண்டு பிடித்து அவரை விருந்துக்கு வரவழைத்தார் கணவர். பின்னர் அவரை கொலை செய்து டிரைவரின் ஆணுறுப்பை மட்டும் வெட்டி எடுத்து மனைவியிடம் கொடுத்து சமைத்து தர சொன்னார் ரூடி. பின்னர் அதனை சமைத்து இருவரும் சாப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் நூரியா வேன் டிரைவருடன் ஏற்கனவே நட்பு இருந்துள்ளது. எனவே காதல் சுற்றுலா சென்றபோது டிரைவருடன் நூரியா உல்லாசமாக இருந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் எனது மனைவி கூறியதை கேட்டதும் நான் மிகவும் கோபம் அடைந்தேன். எனது மன பாரத்தை குறைக்க அவரின் ஆணுறுப்பை சமைத்து சாப்பிட முடிவெடுத்தேன் என்றார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்