105mph வேக ரயில் செக்கனில் உயிர் தப்பிய மனிதன்
பிரிட்டனில் வேர்ஜின் ரயில் சேவையில் ரயில் ஓட்டும் பணியில் உள்ள நபர் ஒருவர் தனது ரயிலை நிறுத்திவிட்டு வெளியே இறங்கிய மறு செக்கன் தான் உணர்ந்தார். தனக்கு அருகில் 105 மைல் வேகத்தில் ஒரு ரயில் வருகிறது என்று. அதற்கு அருகாமையில் நின்றால் காற்றே அவரை தூக்கி ரயிலோடு மோதிவிடும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இதனால் அவர் தனது ரயில் சக்கரங்களுக்கு அடியே சென்று, தண்டவாளத்தை இறுகப் பிடித்துக்கொண்டார். இதனால் வேகமாக வந்த ரயில் அவரை ஒம்றும் செய்யாமல் கடந்து சென்றுள்ளது.
சிலர் தமது சாவையே ஏமாற்றும் சமர்த்தியம் படைத்தவர்கள் என்பது உண்மை தான். நாம் சில சந்தர்பங்களில் எடுக்கும் முடிவு, சமயயோசித புத்தி மற்றும் செயல்படும் வேகம் என்பன எம்மை காப்பாற்றும். இல்லையென்றால் அழிவின் பாதையில் கொண்டு போய் விடும் என்பதும் இந்த உலகில் உண்மையானது. இதில் மாற்று கருத்துக்கு இடம் இருக்க முடியாது எனலா. ஆனால் சிலர் விதி என்று கூறுவார்கள். விதியையும் மதியால் வெல்லலாம் என்பதே உலக நியதி ஆகும்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்