யாழில் சிக்கிய முதல் அனகொண்டா ரக பாம்பு இது தான் புகைப்படம்
யாழ்ப்பாணம் வடமாராட்சி பகுதியில் உள்ள துண்ணாலையில், அனகொண்டா ரக பாம்பு ஒன்று சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. வழமையாக மலைப் பாம்பை விட நீளம் மற்றும் விட்டத்தால் அதிகமான பாம்பையே நாம் அனகொண்டா பாம்பு என்கிறோம். தற்போது சிக்கியுள்ள பாம்பும் இந்த ரகத்தை சேர்ந்தது என்கிறார்கள் ஊர் மக்கள். பல வருடங்களாக பராமரிக்காமல் இருந்த காணி ஒன்றை. பெண் ஒருவர் துப்பரவு செய்ய ஆரம்பித்த வேளை அவர் இந்த 5 மீட்டர் நீளம் கொண்ட பாம்பை கண்டு ஆடிப்போயுள்ளார். ஊர் மக்கள் பலர் திரண்டு அரை மணி நேரமாகப் போராடி இந்தப் பாம்பை கொன்றுள்ளார்கள். இருப்பினும் இதனை உயிரோடு பிடித்து வன விலங்கு அதிகாரிகளிடம் கொடுத்திருக்கலாம் என்று மற்றுமொரு நபர் கவலை வெளியிட்டுள்ளார்.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்