கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கறிகுழம்பிற்காக..!?
திருச்சி மாவட்டம், மணப்பாறை வாகைக்குளத்தைச் சேர்ந்த சண்முகம் வீட்டில் பலகாரங்கள் செய்து கடைகளுக்கு விற்பனை செய்துவருகிறார். இவரின் மனைவி சாந்திக்கும் இவருக்கும் அடிக்கடி குடும்பப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சண்முகம் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், மனைவி சாந்தியிடம் கறிக்குழம்பு வைத்து தரும்படி கேட்டுள்ளார். ஆனால் தீபாவளிக்கு மறுநாள் நோன்பு என்பதால் கறிக்குழம்பு வைக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, சாந்தி பக்கத்துவீட்டு பெண்ணுடன் பெருமாள் கோயிலுக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற சண்முகம் திடீரென கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். மயங்கி விழுந்த சாந்தியை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து சாந்தியின் கணவர் சண்முகம் மணப்பாறை போலீசில் சரணடைந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரத்து வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்