தனிநபரின் கைகளில் சிக்கிக் கொண்ட, NEPL உதைபந்தாட்ட போட்டி..! போரினால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிப்பு..
வடக்கு மற்றும் கிழக்குமாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கி NEPL என்னும் பெயரில் புலம்பெயர் அமைப்புக்களின் நிதிப்பங்களுப்புடன் பிரமாண்டமான பரிசுத்தொகையுடன் உதைபந்தாட்ட போட்டி ஒன்றினை நடாத்துவதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துவரும் நிலையில் இறுதிப்போரின் போது நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களான முல்லைத்தீவு , மாந்தை , வவுனியா ஆகிய சங்கங்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளாதாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
போரினால் பாதிப்புற்று மீண்டுவரும் தமிழ் வீரர்களை ஊக்கப்படுத்துவதாகவும் தமிழர் தாயகப்பகுதிக்கான தெரிவு அணியொன்றினை உருவாக்கப் போவதாகவும் கூறி அனுசரணையாளர்களை பெற்றுக்கொண்டுள்ள போட்டி ஏற்பாட்டுக்குழு போட்டிக்குழுவில் அங்கம் வகிக்கும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தை சேர்ந்த ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப நடந்து வருவதன் விளைவே எந்த பறக்கணிப்பிற்கு காரணமென குற்றஞ்சாட்டியுள்ள பாதிக்கப்பட்ட சங்கங்கள் வடக்கின் அங்கமான எங்களை புறம்தள்ளி வடக்கு கிழக்கிற்கான போட்டியை நடத்துவதும் தாயக தெரிவு அணியொன்றினை உருவாக்குவதும் அப்பட்டமான அநீதியான விடயம் என்பதால் நாமில்லாத அல்லது எமது பங்களிப்பில்லாத இந்த போட்டி தொடர்பாகவும் எமக்கு இழைக்கபட்ட அநீதி தொடர்பாகவும் நாம் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அமைச்சு, அனுசரணையாளர்கள் போன்றோரின் கவனத்திற்கு கொண்டுவரப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்காக போட்டி ஏற்பாட்டுக்குழு சார்பாக பேசவல்ல ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது தாம் அனைத்து உதைபந்தாட்ட சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்ததையடுத்து நாம் மீண்டும் பாதிக்கப்பட்ட சங்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி கடிதம் தோடர்பில் வினவியபோது. போட்டிகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு,எமது மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கழகங்கள் இடை தரகர்கள்மூலம் விற்பனை செய்யப்பட்டு, அவர்கள்மூலம் எமது வீரர்களுடனும் பேரம்பேசப்பட்ட பின்னர் கண்துடைப்பிற்காக தற்போது ஒருசில தினங்களுக்கு முன்னர் எமக்கு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதாகவும் அக்கடிதத்தில் காலதாமதத்தை அவர்களே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழர்கள் செறிவாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து மிகப்பெரிய போட்டியினை நடத்துபவர்கள் ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கு இடமளித்து நடந்துகொண்டமை தமக்கு இந்தபோட்டியின்மீது நம்பிகையீனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்க முன்னரும் இவ்வாறன புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் குற்றம்சாட்டியுள்ளனர்.


No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்