ரெயிலில் விழுந்து கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் பலியான பரிதாபம்..
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்துக்கு நேற்று இரவு 8.45 மணி அளவில் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வந்த பயணிகள் ரெயில் நிற்பதற்காக மெதுவாக வந்தது. அப்போது பிளாட்பாரத்தில் ரெயிலில் ஏறுவதற்காக ஏராளமானோர் நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது பிளாட் பாரத்தின் ஓரத்தில் நின்று கொண்டு இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண் ரெயில் முன் திடீரென்று விழுந்தார். இதில் ரெயில் சக்கரம் அந்த பெண்ணின் மீது ஏறி இறங்கியது. இதில் அந்த பெண்ணின் வயிறு கிழிந்து ஆண் குழந்தை தண்டவாளத்தில் விழுந்து துடிதுடித்து இறந்தது.
உயிருக்கு போராடிய அந்த இளம் பெண்ணை ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் பொதுமக்களுடன் சேர்ந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த இளம்பெண் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சம்பவ இடத்துக்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ஜூலியட் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த பெண் யார்? எந்த ஊர் என்று விசாரணை நடத்தினர். அந்த பெண்ணுடன் யாரும் வரவில்லை. அந்த பெண் மட்டும் தனியாக வந்துள்ளார். கைப்பை எதுவும் கொண்டு வரவில்லை. எந்த ஊருக்கு செல்வது என்று டிக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
இதனால் அந்த 30 வயது நிறைமாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்யும் முடிவுடன் நெல்லை ரெயில் நிலையத்துக்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கணவர் அல்லது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண் யார்? எந்த ஊர் என்று அங்க அடையாளங்கள் மற்றும் ஆடைகளை வைத்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண்ணின் புகைப்படம் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பல பயணிகள் கண்ணீர் விட்டு அழுதது உள்ளத்தை உருக்கியது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்