50 அடி உயரத்தில் இருந்து கூரையை உடைத்து கொண்டு வீட்டிற்குள் விழுந்த கார்..
கோவை மாவட்டம் வால்பாறை எம்.ஜி.ஆர். நகரில் குடியிருந்து வருபவர் ரவி (47). வால்பாறை மெயின் ரோட்டில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
இவர் தனது மனைவி மகேஸ்வரி(33), மகன் சந்தோஷ் (8) மகள் சோபியா (15) மற்றும் உறவினர்கள் நாகராஜன், சிவச்சந்திரன் ஆகியோருடன் வெளியூர் சென்று விட்டு காரில் வால்பாறை திரும்பி கொண்டு இருந்தார்.
காரை சிவச்சந்திரன் ஓட்டி வந்தார். இந்த கார் நள்ளிரவு வால்பாறை காமராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது.
தாறுமாறாக ஓடி ரோடு ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் மீது மோதியது.
அதன் பின்னரும் கட்டுக்குள் வரவில்லை. 50 அடி உயரத்தில் இருந்து உருண்டு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டின் கூரையை உடைத்து கொண்டு வீட்டுக்குள் பாய்ந்தது.
இந்த விபத்தில் ரவி, அவரது மனைவி மகேஸ்வரி, மகன் சந்தோஷ், மகள் சோபியா, உறவினர்கள் நாகராஜன், சிவச்சந்திரன் ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்