Header Ads

கலப்புத் திருமணம் செய்த மகளை கொடூரமாக கொலை செய்த பெற்றோர்..

மத்தியப்பிரதேசம் மாநிலம் பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த சர்லா என்ற பெண் சில ஆண்டுகளுக்கு முன் வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இதனால் சர்லாவின் குடும்பத்தினர் அவருடன் பேசாமல் இருந்துள்ளனர். அவர் கலப்பு திருமணம் செய்ததால் சர்லா மீது கோபமாக இருந்தனர்.

இந்நிலையில், நேற்று சர்லாவின் சகோதரர் கிர்லால் தனது தாய்க்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது உறவினர்களின் உதவியுடன் சர்லாவை அவரது பெற்றோரே ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி கொலை செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சர்லாவின் தந்தையை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள சர்லாவின் தாய் மற்றும் சகோதரரை தேடும் பணியில் போலீசார் தெரிவித்தனர். அறிவியல் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கலப்பு திருமணம் செய்ததற்காக செய்யப்படும் கவுரவ கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.