Header Ads

விருது வாங்கிய மகிழ்ச்சியில் மேடையிலேயே உயிரைவிட்ட தொழிலதிபர்..

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சமீபத்தில் விருது விழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த தொழிலதிபர் என்ற விருது விஷ்ணு பாண்டே (53) என்பவருக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் மேடையில் அவரது பெயர் வாசிக்கப்பட்டதும் மகிழ்ச்சியுடன் எழுந்து மேடைக்கு சென்ற விஷ்ணுபாண்டே விருதை பெற்று கொண்டார்.

விருது கிடைத்த மகிழ்ச்சியில் விருதினை கையில் வைத்து கொண்டு மேடையில் நடனமாடினார். அவரை உற்சாகப்படுத்தும் வகையில் அனைவரும் கைதட்டினர். நடனமாடி கொண்டிருந்த அவர் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு விஷ்ணு பாண்டேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவித்தனர். விருது வாங்கிய சந்தோஷத்தில் நடனமாடியபோது மேடையிலேயே மயங்கி விழுந்து தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.