ஐ.எஸ் தலையில் சுட்டும் சாகாத இளைஞர் 10 பவுண்டுக்காக லண்டனில் குத்திக் கொலை--உண்மை சம்பவம்.
அக்பானிஸ்தானில் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தவேளை. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுளைந்த ஐ.எஸ் தீவிரவாதிகள், நசரி(17) என்ற இளைஞனின் அப்பா, அம்மா, 2 தங்கை ஒரு தம்பி ஆகியோரை சுட்டுக் கொன்றார்கள். அங்கிருந்து எப்படியோ உயிர் பிழைத்த நசரி, 2015 ஆண்டு லண்டன் வந்து அசேலம் அடித்தார்.
அவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி. கஞ்சா புகைத்து வந்துள்ளார். இன் நிலையில் அவர் வெறும் £10 பவுண்சுக்கு கஞ்சா வாங்கிவிட்டு. அந்தக் காசை கொடுக்காமல் இழுத்தடிக்கவே. அதனை சப்பிளை செய்த நபர் மேலும் 4 இளைஞர்களை கூட்டி வந்து அவரை கண் மண் தெரியாமல் தாக்கி ,இறுதியில் கத்தியால் குத்தியுள்ளார்கள். தாக்கிய 5 பேரும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
நெஞ்சில் கத்தி குத்தப்பட்டதால் நினைவிழந்த நசரியை காப்பாற்ற என, அதி தீவிர இதய சிகிச்சை நிபுணர் வரவளைக்கப்பட்டார். அவர் பொலிசாரின் கத்தி ஒன்றை வாங்கி அவரது நெஞ்சை வெட்டி, இயத்தை மீண்டும் துடிக்க வைக்க பெரும் முயற்ச்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் நசரி இறந்துவிட்டார். வெறும் 10 பவுண்டுகளுக்காக கொலை நடக்கும் மிக மிக கேவலமான நாடாக பிரித்தானியா மாறியுள்ளது.
கடந்த 15 நாட்களில் 12 கொலைகள் நடைபெற்றுள்ளதோடு. டிசம்பர் மாதம் முதல் 49 கொலை நடந்துள்ளது என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்கள் பொலிசார். பிரித்தானிய நகரங்களில், ஈஸ்ட் ஹாம், ரூட்டிங், குரொய்டன், டோட்டனம், பிரிக்ஸ்டன், போன்ற நகரங்கள் மிக மிக ஆபத்தானவை என்று கூறப்படுகிறது. தமிழர்களே உங்கள் வீட்டு இளைஞர்கள் இரவில் செல்வதை கொஞ்சம் தடுப்பது நல்லது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்