சீனா விஞ்ஞானிகள் புதிய முயற்சி!

நுளம்புகளை ஒழிப்பதற்காக சீனா விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
உலகில் பேர் மற்றும் விபத்துக்களால் இறப்பவர்களை விட நுளம்பு கடியால் இறப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். நுளம்பு கடியால் டெங்கு, சிக்கன்குனியா மற்றும் மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவலடைந்து வருகின்றது.
இதனால் சீனா பெய்ஜிங்கில் உள்ள தொழில்நுட்ப கல்லூரி, நுளம்புகளை இனங்கண்டு அழிப்பதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதில் சீனா ஏவுகனை பாதுகாப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரேடர் கண்டுபிடிப்பானது 2 கிலோ மீற்றர் சுற்றளவில் உள்ள நுளம்புகளை கண்டுபிடித்து, அழிக்க கூடிய வசதி கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே நுளம்புகளை இனங்கண்டு அழிக்க முடியும் என்றாலும், பரிசோதனையின் பின் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்