23 நாடுகளின் தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா..
ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.
தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உளவுத்துறை அதிகாரி மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றியது தொடர்பாக இங்கிலாந்து அதிரடி நடவடிக்கையாக ரஷியாவின் 23 தூதர்களை உளவாளிகள் என கூறி வெளியேற்றியது. ரஷியாவும் பதில் நடவடிக்கையாக இங்கிலாந்து தூதர்களை வெளியேற்றியது. அமெரிக்க தூதர்களையும் வெளியேற உத்தரவிட்டது.
இவ்விவகாரத்தில் இங்கிலாந்துக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷியாவிற்கு எதிராக நடவடிக்கையை தொடங்கின. ரஷிய தூதர்களை வெளியேற்றியது. அதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
அவ்வகையில், உளவாளியை கொல்ல முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதர்களுக்கு ரஷியா சம்மன் அனுப்பியது. அதைத்தொடர்ந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லாத்வியா, லிதுனியா, போலந்து, சீக் குடியரசு, ஸ்லோவாகியா மற்றும் ஐரோப்பிய யூனியனில் இடம்பெறாத நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் நேற்று மாஸ்கோவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் விசாரணைக்காக ஆஜர் ஆகினர்.
ஆனால் அவர்கள் கூறிய விளக்கம் திருப்தி அளிக்காததால் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, போலந்து, சீக் குடியரசு உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த தூதர்களை ரஷ்யா வெளியேற்றியது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்