Header Ads

பெண்கள் ஜீன்ஸ் மற்றும் செல்போன் உபயோகிக்க தடை விதித்த கிராமம்..

அரியானா மாநிலம் சோனிபட் நகரில் உள்ள  இசிபூர் கேடி கிராமத்தில் பெண்களுக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது. மேலும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளனர். இது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தவறான முடிவாகும். ஆண்களின் எண்ணத்தில் தான் தவறு உள்ளது. பெண்கள் அணியும் உடையில் இல்லை. ஒரு பெண்ணின் குணத்தை அவள் அணியும் ஆடையை வைத்து எவ்வாறு முடியும் என கிராமத்தைச் சேர்ந்த பெண் கூறினார்.

பெண்கள் மேற்கத்திய ஆடைகள் அணிவதினால் தேவையில்லாத கவனத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், செல்போன் பயன்படுத்துவதால் பெண்கள் தவறான பாதைக்கு சென்று விடுகின்றனர். அதனை தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அக்கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தெரிவித்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.