கனேடிய அரசியல் ஆர்வலருக்கு பிரித்தானியாவிற்குள் நுழைய தடை!
முஸ்லிம்களின் கடவுளான அல்லாஹ்வை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்த கனேடிய அரசியல் ஆர்வலருக்கு பிரித்தானியாவிற்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த பெப்ரவரி மாதம் , லோரன் சவுத்தன் என்ற 22 வயதான பெண் அரசியல் ஆர்வலர் அல்லாஹ் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது போன்ற செய்திகளைக் கொண்ட கையேடுகளை விநியோகித்துள்ளார்.
இதன்பிறகு கடந்த மார்ச் 13ஆம் திகதி மீண்டும் அவர் பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதன்போதே அவருக்கு பிரித்தானியாவிறகுள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
எனினும் இதை ஒரு ஆய்வுக்காகத்தான் செய்ததாகவும் மக்கள் இத்தகைய கருத்துக்களை எவ்விதம் எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான் இவ்வாறு செய்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆனால் இதனை முழுமையாக மறுத்துள்ள பிரித்தானியா, லோரன் சவுத்தன் பிரித்தானியாவிற்குள் நுழைவது பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதன் அடிப்படையிலேயே அவருக்கு பிரித்தானியாவிற்குள் நுழை தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்