ரெயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை..
ஜார்க்கண்ட் மாநிலம் கிரீடீஹ் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் இன்று காலை இளம் பெண் தனது காதலுடன் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் இருவரும் வேகமாக வந்து கொண்டிருந்த ஹவுரா-ஜோத்பூர் விரைவு ரெயில் முன் பாய்ந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை நேரில் கண்ட பயணிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் இருவரும் இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்