Header Ads

ரூ.17 கோடி வைரங்களை கொள்ளையடித்த இருவர்..

குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் வைரங்களுக்கு பட்டை தீட்டும் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், இங்குள்ள ‘குளோ ஸ்டார்’ பட்டை தீட்டும் நிறுவனத்தில் இருந்து பட்டை தீட்டப்படாத பச்சை வைரக்கற்களை இந்நிறுவனத்தின் மேனேஜரும் மற்றொரு பணியாளரும் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்காக கடந்த 14-ம் தேதி கொண்டு சென்றனர்.

அப்போது, துப்பாக்கி முனையில் அவர்களை வழிமறித்த சிலர் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்களை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கட்டார்காம் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதன் விளைவாக இந்த கொள்ளையில் தொடர்புடைய அர்ஜுன் பாண்டே, மன்வேந்திரா தாக்கூர் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்கள் இருவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அர்ஜுன் பாண்டே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வைரங்களை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் மூன்றாவது குற்றவாளியான மோஹித் சிங் ரானா என்பவனை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.