Header Ads

பச்சைக் கொடி காட்டிய மகாராணி: அரச ஆடம்பரத்தோடு ஹரியின் திருமணம் நிச்சயம் நடக்கும்...


குடும்பத்தில் இரண்டாவது வாரிசு என்றாலே மவுசு கொஞ்சம் குறைவு தான். அது போல பிரித்தானிய மகாராணியார் குடும்பத்தில் மூத்த பேரப்பிள்ளையான இளவரசர் வில்லியத்திற்கு தான் எல்லா முன்னுரிமையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவரே அடுத்த ராஜாவாக பதவி ஏற்க்கவும் உள்ளார். வழமைபோல இளவரசர் ஹரி சாதாரண நபர் போல உலவி வருகிறார். ஆனால் அவர் தனது அன்னை டயானா போல சகஜமாக அனைவருடனும் பழகி வருவதால், மக்கள் அவரை அதிகமாக விரும்புகிறார்கள். இன் நிலையில் 2016ம் ஆண்டு முதல் அமெரிக்க நடிகையான மெகான் மார்கிளை ஹரி காதலித்து வந்தார். திருமணத்தை வரும் மே மாதம் 19ம் திகதி நடத்த அவர் திட்டமிட்டு இருந்தார்.  நடிகை என்பதனால் மெகான் மார்கிள் தொடர்பாக நல்ல அபிப்பிராயத்தை அரச குடும்பம் கொண்டிருக்கவில்லை.

இதனால் திருமண வீட்டிற்கு மகாராணி வர மாட்டார் என்று ஹரி முடிவு செய்துவிட்டார். அப்பா சார்ளஸ் தலைமையில் கல்யாண வீட்டை நடத்த முடிவு செய்தார். தேதியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரித்தானிய மகாராணியார் எவ்வளவு பெரிய உள்ளம் கொண்டவர் என்பதனை காட்டி உள்ளார். "எனது செல்லப் பேரப்பிள்ளையின் திருமணம் அரச மரியாதையோடு நடக்கும்" நான் திருமண வீட்டிற்கு செல்வேன் ! . சகல மரியாதையோடு அவர் திருமணம் நடக்கும் என்று அவர் அறிவித்தல் ஒன்றை விட்டு. அனைவரையும் மனம் உருக வைத்துள்ளார். இந்த அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது.

பிரித்தானிய மக்களிடையே அவரது அறிவிப்பு மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இளவரசர் ஹரி ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார் என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பழுத்து முதிர்ந்த அரசியல்வாதியாகவும். ஒரு மகாராணியாகவும் எலிசபெத் அம்மையார் இருப்பதோடு. பல நூறு வருடங்களாக கடைப்பிடிக்கப்படும், பழமையான சில சம்பிரதாயங்களை உடைத்து எறிந்து , நவீன உலகிற்க்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றிக் கொண்டும் வருகிறார் . இதேவேளை மக்கள் ஆதரவு பெருகி ஹரியின் திருமணம் மிகவும் நல்ல முறையில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

என்ன தான் பலர் மகாராணியை விமர்சனம் செய்தாலும். அவர் பல நாடுகளை பிடித்து அங்குள்ள வழங்களை சுரண்டி பிரித்தானியா கொண்டு வந்தார் என்று குறை கூறினாலும்.அவர் பிரித்தானிய மக்களுக்கு நன்மையே செய்துள்ளார். ஏன் தேசிய தலைவரை சிங்களவர் தூற்றினாலும். தமிழ் மக்கள் தலையில் வைத்து கொண்டாவில்லையா ? அது போல பிரித்தானிய நலனுக்காக தன்னை அர்பணித்த மகாராணிக்கு இன்றும் பல லட்சக் கணக்கான மக்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை ஆகும். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.