Header Ads

சாலையோரம் நடந்து சென்றவர்களுக்கு நேர்ந்த கெதி..

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நோக்கி நேற்று ஒரு கார் வந்துகொண்டிருந்தது. அந்தக் கார் லக்னோ-பஹ்ரைச் சாலையில் ஜர்வால் என்ற இடத்தில் வந்தபோது, குறுக்கே சைக்கிளில் சென்றவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பினார் டிரைவர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. அதன்பின்னர் மரத்தில் மோதி நின்றது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காரில் இருந்த அகமது (20), சலிம் (22) மற்றும் சாலையோரம் நடந்து சென்ற சகாப் தயாள் (30), ராகேஷ் குமார் (34), மணீஷ் (24)  என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.