அமெரிக்காவில் சுற்றுலா சென்ற எம்.பிக்களை ஏற்றி சென்ற ரெயில், லாரியுடன் மோதி விபத்து..
அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மேற்கு வர்ஜினியா மாநிலத்திற்கு ரெயிலில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த ரெயில் சார்லோட்டஸ்வில்லி என்ற நகரை கடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற குப்பை லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியில் இருந்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தில் எம்.பிக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு ரெயில் பயணத்தை எம்.பிக்கள் தொடர்ந்தனர். இந்த சம்பவம் குறித்து சார்லோட்டஸ்வில்லி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்