பெண்ணைக் கிண்டல் செய்தவரை கண்டித்த, ஆட்டோ டிரைவர் கொலை.. பரபரப்புச் சம்பவம்..
திருவனந்தபுரம் அருகே உள்ள இருஞ்சாலுகூடா பகுதியை சேர்ந்தவர் சுஜித் (வயது 26) ஆட்டோ டிரைவர்.
சுஜித்தின் உறவு பெண் ஒருவர் வேலைக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த மிதுன் (28) என்ற வாலிபர் அவரை பின்தொடர்ந்து சென்று ஈவ்டீசிங் செய்து உள்ளார். அந்த பெண் அவரை பலமுறை கண்டித்த பிறகும் அவர் தனது செயலை கைவிடவில்லை.
இதனால் இதுபற்றி சுஜித்திடம் அந்த பெண் கூறி அழுதார். உடனே மிதுனை அழைத்து சுஜித் கண்டித்தார். தனது உறவு பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அவர் கூறினார்.
அதன்பிறகும் மிதுன் ஈவ்டீசிங்கை தொடர்ந்து உள்ளார். இது சுஜித்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று தனது ஆட்டோ நிறுத்தம் வழியாக சென்ற மிதுனை தடுத்து நிறுத்தி அவரை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது திடீரென்று மிதுன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ஆட்டோ டிரைவர் சுஜித்தை சரமாரியாக குத்திவிட்டு ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த சுஜித் ரத்தவெள்ளத்தில் நடுரோட்டில் உயிருக்கு போராடினார். ஆனால் அந்த வழியாக சென்றவர்கள் யாரும் உடனே அவரை காப்பற்ற முயற்சி செய்யவில்லை.
அதன்பிறகு யாரோ போன் மூலம் கொடுத்த தகவலை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சுஜித்தை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மிதுனை தேடி வருகிறார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்