அல்வா சாப்பிட்டு, 5 பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சித் தகவல்..
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் கங்காபூர் பகுதியை சேர்ந்தவர் சஜ்ஜன் சிங். சமீபத்தில் சாலையை கடக்கும்போது அடிபட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பார்ப்பதற்காக சஜ்ஜன் சிங் உறவினர்கள் நேற்று மாலை வந்தனர். அப்போது அவர்களை உபசரிக்க அல்வா செய்தனர்.
அந்த அல்வாவை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மேலும், வயிற்று வலியால் துடித்தனர். அவர்களது அலறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் போலீசார் அல்வா சாம்பிளை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அல்வா புட் பாய்சனாக மாறியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்