மடுத் திருத்தலத்தில் சிறப்பாக இடம்பெற்ற, ஆங்கிலப் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி....
மன்னார், மடுக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி மடு பரிபாலகர் கிங்கிலி சுவாம்பிள்ளை தலமையில் சிறப்பாக நடைபெற்றது.
நேற்றைய தினம் இரவு 11.15 மணிக்கு ஆரம்பமான குறித்த திருப்பலி தமிழ் மொழியிலும், சகோதர மொழியான சிங்கள மொழியிலும் இடம்பெற்று 1.30 மணியளவில் நிறைவடைந்தது.
இத் திருப்பலியில் பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகளுடன் நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்