கஜகஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில், திடீர் நிலநடுக்கம்: 6.2 ரிக்டர் அளவில் பதிவானது..
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜகஸ்தான் - இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், இந்திய தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அதன்பின் சிறிது நேரத்தில் நிலைமை சீரானது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்